- செய்திகள், விளையாட்டு

விஜேந்தர்-சோல்ட்ரா இன்று மோதல்

 

போல்டன், மே 13:-

இந்தியாவின் பிரபல குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங்- போலாந்தின் ஆன்ட்ரெஜ் சோல்ட்ரா இடையிலான போட்டி இங்கிலாந்தில் உள்ள போல்டன் நகரில் இன்று நடக்கிறது.

ஒலிம்பிக், உலகப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ள இவர் இன்று நடக்கும் 8 சுற்றுகள் கொண்ட போட்டியில் சோல்ட்ராவுடன் மோதுகிறார்.

இதனிடையே இது தொடர்பாக பேசிய விஜேந்தர், சோல்ட்ராவின் குத்துச் சண்டை தொடர்பான விடியோக்களை தாம் பார்த்து வருவதாகவும், அவருடன் போட்டியிடுவது சவாலான ஒன்றுதான் என்றும் தான் மிகவும் நன்றாக தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டார்.

விஜேந்தர் ஏற்கெனவே தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply