- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள்

விஜயகாந்த் அழைப்பை ஏற்க மறுப்பு- மாவட்ட செயலாளர்கள் வருகை ரத்து தே.மு.தி.க.வில் குழப்பம் நீடிப்பு

சென்னை, ஏப்.7-
கட்சியில் இருந்து எங்களை நீக்கியது செல்லாது எனவும், தே.மு.தி.க. நிர்வாகிகளை திரட்டி ஓரிரு நாளில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர். இதனால் தே.மு.தி.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பம் நீடிக்கிறது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், சென்னை மகளிர் மாநாட்டில் வருகிற சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்தார். இதையடுத்து அவரை மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். பின்னர் விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து ேதர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இதனால் தே.மு.தி.க.வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது.

போர்க்ெகாடி

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தே.மு.தி.க., தலைமை கூட்டணி குறித்த முடிவை தன்னிச்சையாக அறிவித்ததாகவும்,  தொண்டர்களின் கருத்துக்கும், விருப்பத்திற்கும் கட்சி தலைமை முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று போர்க்கொடி உயா்த்திய தே.மு.தி.க. சட்டமன்ற கொறடாவும், கட்சியின் கொள்கை பரபரப்புச் செயலாளருமான சந்திரகுமார் உள்ளிட்ட 3  எம்.எல்.ஏ.க்கள் உள்பட பல்வேறு மாவட்ட செயலாளர்களும் அதிரடியாக பேட்டியளித்தனர்.
அவர்களின் பேட்டி ஊடகங்களில் வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே சந்திரகுமார் உள்பட  அதிருப்தி மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் கட்சியின் அடிப்படை  உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கி அதிரடியாக  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டார். இதனால் தே.மு.தி.க. உடைந்தது.
குழப்ப நிலை

தே.மு.தி.க.வில் திடீரென ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையில் தொண்டர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாயினார்கள். இந்தநிலையில் சென்னையில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை கூட்டத்துக்கு கட்சி தலைமை ஏற்பாடு செய்திருந்ததாக தகவல் வெளியானது. இதனால் நேற்று காலையில் இருந்தே கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
தொண்டர்கள் கட்சி அலுவலகம் முன் திரண்டிருந்தனர். அவர்கள் சந்திரகுமாருக்கு எதிராக கோஷம் போட்டனர். வெளி மாவட்டத்தில் இருந்து ஒவ்வொரு நிர்வாகிகளாக வர ஆரம்பித்தனர். பரபரப்பான நிலையில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு வருவார் என்று ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. இதனால் தொண்டர்களும், நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
8 மாவட்ட செயலாளர்கள்
ஆனால் மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலானவர்கள் வரவில்லை. மேலும் கட்சி எம்.எல்.ஏ.க்களில் பலர் வரவில்லை. 8 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே வந்திருந்தனர். இதனால் கட்சிக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து வரவேண்டிய நிர்வாகிகள் யாரும் வரவில்லை என்பதால் கட்சி வாசல் முன் திரண்டிருந்த தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்த எம்.எல்.ஏ.க்களில் பார்த்தசாரதி நிருபர்களிடம் பேசும்போது, கட்சியில் இருந்து யார் சென்றாலும் தே.மு.தி.க.வை அழிக்க முடியாது. கட்சி தனி நபரை நம்பி இல்லை. கேப்டன் விஜயகாந்தை மட்டுமே நம்பி உள்ளது என்று தெரிவித்தார். தே.மு.தி.க.வின் பொருளாளர் இளங்கோவன் கூறும்போது, தி.மு.க.வின் கைக்கூலிகளாக சந்திரகுமாரும் அவரது ஆதரவாளர்களும் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே தே.மு.தி.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலையில் பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்தைத்தான் நான் பிரதிபலித்தேன் என்று சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்த சந்திரகுமார் தனது கருத்தை மீண்டும்  உறுதிப் படுத்தினார்.

ஓரிரு நாளில் முடிவு
இந்த நிலையில், தே.மு.தி.க.வில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் அவரது ஆதரவாளர்கள்  சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நிருபர்களை சந்தித்தனர். அப்போது சந்திரகுமார் கூறியதாவது:-
மக்கள் நலக்கூட்டணி குறித்து தலைவர் விஜயகாந்த் எடுத்த கருத்து குறித்து மாநில, மாவட்ட நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கப்படவில்லை.  இதுகுறித்து நிர்வாகிகளுக்கு எவ்வித அறிவிப்புமின்றி, கூட்டணி குறித்து ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் தெரிவித்த கருத்து ஒட்டுமொத்த தே.மு.தி.க.வின் கருத்தாகும்.

பல மாவட்ட செயலாளர்கள் மட்டுமின்றி உயர்மட்ட நிர்வாகிகள் பலரும், பல உறுப்பினர்களும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களை வரவழைத்து அவர்களுடன் கலந்து பேசி, இன்னும் ஓரிரு நாளில் முக்கிய முடிவை அறிவிப்போம்.

இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.
குழப்பம் நீடிப்பு

விஜயகாந்த் எதிர்ப்பாளர்களின் முடிவுக்கு மேலும் பல மாவட்ட செயலாளர்களும், எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்து இருப்பதால் நெருக்கடி முற்றி வருகிறது. இதனால் தே.மு.தி.க. வில் ஏற்பட்டுள்ள குழப்பம் நீடிக்கிறது. இதனால் கூட்டணி முடிவிலும் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
கட் டி.சி

எங்களை கட்சியில் நீக்க அதிகாரம் கிடையாது

தே.மு.தி.க. விஜயகாந்த் கட்டிப்பாட்டில் இல்லை
எதிப்பாளர்கள் அதிரடி
மக்கள் நலகூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ேத.மு.தி.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள சந்திரகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று காலை சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது

நீக்க முடியாது
கட்சியின் பொறுப்புகளில் இருந்து அதிருப்தி நிர்வாகிகளை நீக்கியது தவறான முடிவாகும். எங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் முறைப்படி விளக்கம்  கேட்டு நோட்டீசு கொடுக்க வேண்டும். அதன் பிறகு தான் கட்சி பொறுப்புகளில்  இருந்து நீக்க முடியும். கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கும்  அதிகாரம் பொதுக்குழுவுக்கு உண்டு.
பொதுக்குழுவில் தலைமை நிர்வாகிகள் 9 பேரும், உயர்மட்ட குழு நிர்வாகிகள் 14 பேரும் சேர்ந்து தான் எந்த முடிவையும் எடுக்க முடியும். முடிவு எடுக்கிற அந்த குழுவில் நாங்கள் 5 பேர் இடம் பெற்று இருக்கிறோம். அப்படி இருக்கும்போது எங்களை எப்படி அவர் நீக்க முடியும். பொதுக்குழுவை கூட்டித்தான் நீக்க முடியும். அதுவும் பதவி பொறுப்புகளில் இருந்து மட்டும்தான் நீக்க முடியும். அடிப்படை உறுப்பினர் இருந்து நீக்க முடியாது.
விலை போகவில்லை
எங்களுக்கு எதிராக சட்டசபை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்களையும்  வரவழைத்து ஊடகங்களுக்கு பேட்டி அளிக்குமாறு கட்சி தலைமை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தி.மு.க.விடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு  அவர்களுக்கு விலை போய்விட்டதாக எங்கள் மீது அவதூறு பரபரப்பப்படுகிறது. நாங்கள் யாரும் பணத்திற்கு விலை  போகவில்லை.
ஏற்கனவே கட்சியில் அதிருப்தி நடவடிக்கையில் ஈடுபட்டு  அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை  எடுக்கப்படவில்லை. எங்கள் மீது மட்டும் இந்த அவசர நடவடிக்கை எடுக்க காரணம் என்ன?. இதற்கு கட்சி தலைமை விளக்கம் அளிக்க வேண்டும். கட்சி தான் முக்கியம், தலைமை தான் முக்கியம் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்தில்லை.
விஜயகாந்த் கட்டுப்பாட்டில் இல்லை

தே.மு.தி.க. தலைமையிடம் தலைவர் விஜயகாந்த் இடம் இருந்து பிரேமலதாவிடம் முழுவதுமாக  சென்று விட்டது. தற்போது கேப்டனின் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை. கூட்டணியை  உருவாக்கியது பிரேமலதாதான். அதனால் தான் கட்சி, தற்போது இப்படி அந்திரத்தில் தொங்கி ெகாண்டு இருக்கிறது. தே.மு.தி.க. தரப்பில் கூட்டணி குறித்து தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான். விஜயகாந்திற்கு தி.மு.க.  பணம் கொடுத்ததாக கூறுவது தவறான தகவலாகும். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வைகோ செயல்பட்டு  வருகிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த பேட்டியின் போது சந்திரகுமாருடன் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.எல்.ஏ, சி.எச்.சேகர் எம்.எல்.ஏ., தேனி முருகேசன் உள்ளிட்ட கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply