- செய்திகள், விளையாட்டு

விசாகப்பட்டினத்தில் நாளை தொடக்கம் தேசிய பீச் கபாடிப் போட்டி

விசாகப்பட்டினம், ஏப். 15:-

விசாகப்பட்டினத்தில் 8-வது தேசிய அளவிலான பீச் கபாடிப் போட்டி வரும் 16-ந்தேதி தொடங்குகிறது. இப்போட்டி 19-ந்தேதி வரை நடக்கிறது.

இது குறித்து ஆந்திர கபாடி அமைப்பின் செயலாளர் வி. வீராலங்கையா கூறுகையில், “ 24 ஆடவர் அணிகள், 22 மகளிர் அணிகள் உள்ளிட்ட 36 அணிகள் மோதும், 8-வது தேசிய பீச் கபாடிப்போட்டி விசாகப்பட்டினத்தில் 16-ந்தேதி முதல் 19ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பட்டம் வெல்லும் அணி செப்டம்பர் மாதம் நடக்கும் ஆசிய பீச் போட்டிகளுக்கு தகுதிபெறும். பரிசளிப்பு விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்கிறார். ''  என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply