- சினிமா, செய்திகள்

விக்ரம் நடிக்கும் புதிய படம் மாரீசன்

 

`அரிமா நம்பி'' வெற்றிப் படத்தை இயக்கிய ஆனந்த்சங்கர் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் மாரீசன். நடிகர் விக்ரம் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யாமேனன் நடிக்கிறார்கள். மலேசியா, பாங்காக், லடாக் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அதைத் தொடர்ந்து சென்னையிலும் முக்கிய காட்சிகளை படமாக்குகிறார்கள்.
விஜய் நடித்த புலி படத்துக்கு முதலில் `மாரீசன்'' என்ற தலைப்பை தேர்வு செய்தார்கள். கடைசி நேரத்தில் அந்த தலைப்பு மாற்றப்பட்டு புலி என்ற தலைப்பு உறுதியானது. விட்டுப்போன இந்த தலைப்பை இப்போது விக்ரம் படத்துக்கு வைத்து விட்டார்கள்.

Leave a Reply