- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் பணி ஓய்வு

சென்னை, ஏப்ரல் 1-
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக பணியாற்றி வந்த எஸ்.ஆர். ரமணன் நேற்று பணி ஓய்வு பெற்றார்.
36 ஆண்டு பணி
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் 36 ஆண்டுகால பணிக்குப்பின் சென்னையில் உள்ள தனது அலுவலகத்தில் சக ஊழியர்களின் மத்தியில் இருந்து நேற்று பணி ஓய்வு பெற்றார்.

இயற்கை மீது ஆர்வம்

இதற்கான நிகழ்ச்சியின் போது எஸ்.ஆர்.ரமணன் பேசியபோது, "தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் என் மீது வைத்திருக்கும் அன்பை காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு சிறுவயது முதல் இயற்கை மீது ஆர்வம் அதிகம் அதனால்தான் இந்த துறையை தேர்ந்தெடுத்து பணிக்கு வந்தேன். நான் பணியில் சேர்ந்தபோது இந்த துறையில் நவீன தொழில் நுட்ப கருவிகள் அந்த அளவுக்கு இல்லை. தற்போது செயற்கை கோள், ரேடார், துருவ வட்டங்கள் போன்றவற்றில் இருந்து அனுப்பப்படும் படங்கள் துல்லியமாக உள்ளன. மேலும் கணினி சார்ந்த கணிப்புகளும் மேம்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் இடையே வானிலை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பேச்சுகளில் ஈடுபட உள்ளேன்" என்று குறிப்பிட்டார்.
மக்களின் ஹீரோ…
ரமணனை சமூகவலைதளங்களில் மழைக்கடவுள், வர்ண பகவானின் தம்பி என தமிழக மக்கள் கொண்டாடினர். பள்ளி செல்லும் குழந்தைகளின் ஹீரோவாக மாறினார் ரமணன் என்று சொன்னால் அது மிகையாகாது.

Leave a Reply