- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

வாக்குப்பதிவை 100 சதவீதம் உயர்த்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய மணல் சிற்பங்கள்

சென்னை, ஏப்.4-
சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவை 100 சதவீதம் உயர்த்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய சிறப்பு மணல் சிற்பங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி பார்வையிட்டார்.
மணல் சிற்பங்கள்
தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவை 100 சதவீதமாக உயர்த்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி, அரசினர் கவின் கலைக்கல்லூரி மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து மெரினா கடற்கரையில் மணல் சிற்பத்தை உருவாக்கியது. இதனை  மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான டாக்டர் பி.சந்திரமோகன் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அரசினர் கவின் கலைக்கல்லூரியை சார்ந்த மாணவர்கள், ஆசிரியர்களும், தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்களும் என சுமார் 50 மேற்பட்ட மணற்சிற்ப கலைஞர்கள் கலந்து கொண்டு 100 சதவீத வாக்களிப்பதின் அவசியத்தினை குறித்து 2 பெரிய மணற்சிற்பங்களை வடிவமைத்திருந்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான டாக்டர் பி.சந்திரமோகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
விழிப்புணர்வு முகாம்
வருகிற சட்டசபை தேர்தலில் அனைவரும் தங்கள் வாக்குகளை 100 சதவீதம் அளிக்க வேண்டும் என்றும், வாக்குப்பதிவிற்கான வயது பூர்த்தியடைந்த கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் தங்கள் வாக்குகளை வாக்கு பட்டியலில் 100 சதவீதம் சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  வாக்குப்பதிவு குறைவாக பதிவான பகுதிகளை கண்டறிந்து அங்கும் இதுபோன்ற பல்வேறு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply