- செய்திகள், மாவட்டச்செய்திகள்

வாகன சோதனையில் ரூ. 62 லட்சம் பறிமுதல் பறக்கும் படையினர் அதிரடி…

மாதவரம், மார்ச் 29-
சென்னை திருவொற்றியூரில் உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு சென்ற 62 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.
பணம், காசோலை
திருவொற்றியூர் சுங்கசாவடி பேருந்து நிலையம் அருகே   தேர்தல் பறக்கும் படை அதிகாரி பச்சையப்பன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை  மடக்கி சோதனையிட்டனர்.  ஓட்டுனர் யுவராஜ் ரூபாய் 5 லட்சத்து 10 ஆயிரம் பணம், மற்றும் ரூ.57  லட்சத்திற்கு  காசோலை வைத்து இருந்தார். ஆனால் அதற்கான உரிய ஆவணம் இல்லாததால்  பறிமுதல் செய்து திருவொற்றியூர் தேர்தல் அதிகாரி பெஞ்சமின் இடம் ஒப்படைக்கப்பட்டது.

காரில் கொண்டு செல்லப்பட்ட  பணம் தனியார் பெட்ரோல் பங்கிற்காக வங்கியில் செலுத்துவதற்கு கொண்டு செல்வதாக டிரைவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான   உரிய ஆவணங்களை மாலை நான்கு மணிக்குள் காண்பித்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திருப்பி கொடுப்பதாக பெஞ்சமின் தெரிவித்தார்.

ஒப்படைப்பு

சுமார் 2 மணி நேரத்தில் பெட்ேரால் பங்கு அதிகாரிகள் உரிய ஆவணங்களை கொண்டு வந்து காண்பித்தனர். இதனையடுத்து அவர்களிடம் பணத்தை தேர்தல் அதிகாரி ஒப்படைத்தார்.   வாகன சோதனையில் 62 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply