- செய்திகள், மாவட்டச்செய்திகள்

வாகன சோதனையில் ஈடுபட்ட சி.பி.ஐ. அதிகாரி போல் நடித்த வாலிபர் கைது போலீசார் நடவடிக்கை…

சென்னை, ஏப்.18-

கோயம்பேடு அருகே சி.பி.ஐ அதிகாரி என்று கூறி வாகன சோதனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கோயம்பேட்டை அடுத்த நெற்குன்றம், மேட்டுக்குப்பம் சந்திப்பில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் காருடன் நின்றிருந்த வாலிபர் ஒருவர் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தார்.

பணம் வசூல்

வாகனத்தில் இருப்பவர்களிடம் தான் ஒரு சி.பி.ஐ அதிகாரி என்றும் இந்த வழியாக சில பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. அதனால் வாகன சோதனை செய்கிறேன் என்று கூறி மிரட்டி பணம் பறித்துக் கொண்டிருந்தார்.

மப்டி போலீஸ்

அப்போது அந்த வழியாக மப்டி உடையில் வந்த போலீசாரிடமும் இதையே கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் சிலர் அவரை கோயம்பேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் அவர் போலி சி.பி.ஐ அதிகாரி என்பதும் ராயப்பேட்டை மஸ்தான் குளம் பகுதியை சேர்ந்த அபிசேக்(24) என்பதும் வேலையில்லா பட்டதாரி என்பதும் தெரிந்தது.

கைது

இதனால் கோயம்பேடு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவர் கொண்டுவந்த காரையும் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவு படி புழல் சிறையிலடைத்தனர்.

Leave a Reply