- செய்திகள்

வாகனம்மோதி வாலிபர் சாவு மறைமலைநகர் அருகே…

காஞ்சிபுரம், ஜூலை.29-
காஞ்சிபுரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் மகன் ஷ்யாம் (21). இவர் பொத்தேரி பகுதியில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தார். உடனடியாக செங்கல்பட்டு சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பிறகு மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply