- செய்திகள், வணிகம்

வளரும் நாடுகளுக்கு ‘மூடிஸ்’ எச்சரிக்கை…

புதுடெல்லி, டிச. 16:-

சர்வதேச கடன்தரநிர்ண நிறுவனமான மூடிஸ் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அமெரிக்க பெடரல் வங்கியின் 2 நாள் அதிகாரப்பூர்வ உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் முடிவில், 0.25 சதவீதம் வட்டி உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வட்டி வீதம் அதிகரிக்கப்படும் போது, வளரும் நாடுகளின் பங்குச்சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படும், சந்தைகள் பெரும் சரிவைச் சந்திக்க நேரிடும்.

வளரும் நாடுகளின் பங்குச்சந்தையில் இருந்து முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்பப் பெறுவார்கள்,  முதலீட்டாளர்கள் மத்தியில் நிச்சயமற்ற சூழல் உருவாகும். குறிப்பாக முதலீட்டாளர்கள் வளரும் நாடுகளில் இருந்து கிடைக்கும் ஆதாயத்தை சிறிது குறைத்துக்கொண்டு  மீண்டும் அமெரிக்காவுக்கே முதலீட்டை கொண்டு செல்லலாம். இந்த பாதிப்பு ஒவ்வொரு நாடுக்கும் வித்தியாசப்படும். அமெரிக்க பெடரல் வங்கியின் நடவடிக்கையைப் பொறுத்தே டாலருக்கு நிகராக வளரும்நாடுகளின் கரன்சி மதிப்பு அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply