- செய்திகள்

வளசரவாக்கத்தில் சமுதாய நல மைய மருத்துவமனை கட்டும் பணி அமைச்சர் பா. பெஞ்சமின் தொடங்கிவைத்தார்…

சென்னை, ஆக. 26-
சென்னை, வளசரவாக்கம் மருத்துவமனை சாலையில் 100 படுக்கைகளை கொண்ட சமுதாய நல மைய மருத்துவமனை கட்டும் பணியினை பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பா. பெஞ்சமின் தொடங்கிவைத்தார்.
இது தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரூ.8 கோடி
முதல்-அமைச்சர் ெஜயலலிதா ஆணைக்கிணங்க பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-151, சின்ன போரூருக்குட்பட்ட வளசரவாக்கம் மருத்துவமனை சாலையில் 7 கோடியே 95 லட்சம் ரூபாய், 100 படுக்கைகள் கொண்ட சமுதாய நல மைய மருத்துவமனை கட்டும் பணியினை பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பா. பெஞ்சமின், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மற்றும் அம்பத்துார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.அலெக்சாண்டர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
2 தளங்களுடன்
இந்த மருத்துவமனை, மனையின் மொத்த பரப்பளவு 1,29,167 சதுர அடி ஆகும். தளங்களின் எண்ணிக்கை தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்கள், தரைதளம் 18,083 சதுர அடி ஆகும், முதல் தளம் 17,077 சதுர அடி மற்றும் இரண்டாவது தளம் 17,077 சதுர அடி என உத்தேசிக்கப்பட்டுள்ளது
இந்நிகழ்வில், துணை ஆணையர் (பணிகள்)  கே.எஸ். கந்தசாமி, துணை ஆணையர் (சுகாதாரம்) ஆர்.கண்ணன்,  வளசரவாக்கம் மண்டல குழுத்தலைவர் கே. சேகர், மாமன்ற உறுப்பினர் ஆர். தங்கம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply