- செய்திகள்

வலுவான நிலையில் இலங்கை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்…

கொழும்பு, ஆக.17:-

இலங்கை – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி. மைதானத்தில்  13-ந்தேதி தொடங்கியது.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செயதது. சண்டிமால் அடித்த 132 ரன்கள் மற்றும் தனஞ்செய டி சில்வா அடுத்த 129 ரன்களால்  இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கியது ஆஸ்திரேலிய அணி, அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஷேன் மார்ஷ்  ஆகியோரின் சதத்தால் அந்த அணி 379 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது.

இலங்கை அணி 24 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்று முன் தினமான 3-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்திருந்தது. கருணரத்னே 8 ரன்னுடனும், குஷால் சில்வா 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய கருனரத்னே 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் ஓரவிற்கு ரன்கள் சேர்த்தார்கள். ஆனால் குஷால் டி சில்வா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 115 ரன்கள் சேர்த்து அவுட்டானார். இவரது சதத்தால் இலங்கை அணி 4-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது. தற்போது வரை இலங்கை அணி 288 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இன்று விறுவிறுப்பாக விளையாடி 300 ரன்களுக்கு மேல் முன்னிலை வைத்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்ய வாய்ப்புள்ளது. அப்படி செய்தால் ஆஸ்திரேலியா கடைசி நாளில் 300 ரன்களை சேஸிங் செய்ய வேண்டும். இலங்கை ஆடுகளத்தில் கடைசி நாளில் 300 ரன்களை சேஸிங் செய்வது அவ்வளவு எளிது கிடையாது.

இதனால் இலங்கை அணி கொழும்பு டெஸ்டில் வெற்றி பெறும். இல்லையெனில் போட்டி டிராவில் முடியும்.

Leave a Reply