- செய்திகள், மாநிலச்செய்திகள்

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்காக மத்திய அரசின் ரூ.1 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டம்

ஆமதாபாத், ஏப்.7-

நாடு முழுவதும் உள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்காக,  ஆதார் அட்டையுடன் வாயிலாக ஒரு லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு மூலம் சிகிச்சை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு  திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ெஜ.பி. நட்டா நேற்று குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது-

ரூ. 1 லட்சம் மருத்துவ காப்பீடு

நாடு முழுவதும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை-எளியவர்களுக்காக ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. ஆதார் அட்டை பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் ரூபாய்வரை இலவசமாக மருத்துவமனைகளில் சிகிச்ைச பெறலாம். மேலும் இந்த திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்ட ஏழைகள் மேலும் 30 ஆயிரத்துக்கு மருத்துவ காப்பீட்டு பலனை பெற முடியும்.

இதற்கான திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு பணம் தரப்படமாட்டாது. மருத்துவமனைகள்  மூலம் மட்டுமே ரூ.1 லட்சம் மதிப்புள்ள மருத்துவ காப்பீடு சிகிச்சை பெறமுடியும். இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தி்ன் மூலம் நாடு முழுவதும் 8 கோடி பேர் பயன்பெறுவார்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனைகள்

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் சிஎச்சி அளவில் உள்ள அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். மருத்துவக்கல்லூரி அல்லாத  58 மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.  மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

ஜிகா வைரசை கட்டுப்படுத்த ேதவையான நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகிறது. எனவே நோய்களை தடுப்பதில் அரசு உஷார் நிலையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. எனவே இதில் யாரும் பீதியடைய தேவையில்லை.

இவ்வாறு மத்திய அமைச்சர் ெஜ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

Leave a Reply