- செய்திகள், வணிகம்

(வர்த்தகம்) ஏர் இந்தியாவின் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் ஸ்டேட் வங்கி…

 

மும்பை, ஜன.4:-
அரசு நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான 4 அடுக்குமாடி குடியிருப்புகளை ஸ்டேட் வங்கி வாங்க உள்ளது. இந்த குடியிருப்புகளை ரூ.90 கோடிக்கு ஏர் இந்தியா விற்பனை செய்கிறது.
ஒப்புதல்
ஏர் இந்தியா நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு திருப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக அதன் சொத்து விற்பனை திட்டத்துக்கு 2012 ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது. மேலும், அப்போது ரூ.30 ஆயிரம் கோடியும் வழங்குவதாக மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது.
சொத்து விற்பனை திட்டத்தின் கீழ், 2013-14-ம் நிதி ஆண்டு முதல் 10 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரம் ேகாடி திரட்ட ஏர் இந்தியா முடிவு செய்தது. இதன் மூலம் வருவாய்க்கும், செலவுக்கும் இடையிலான இடைவெளியை சரி செய்வதற்காக இதனை மேற்கொண்டுள்ளது. தெற்கு மும்பையின் பெடார் சாலையில் உள்ள 4 அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஏர் இந்தியா களம் இறங்கியது.
தெற்கு மும்பை
இதற்காக ஆன்லைனில் ஒப்பந்த புள்ளிகளை கோரியது. ஏர்  இந்தியாவும் ஸ்டேட் வங்கியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பட்சத்தில், ஸ்டேட் வங்கி இந்த குடியிருப்பை வாங்கும் நடவடிக்கையை தொடங்கி விடும். ஏர் இந்தியா நிறுவனத்தின் சட்டப் பிரிவு இதற்கான விற்பனை ஒப்பந்த அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஸ்டேட் வங்கி இந்த குடியிருப்புகளை தனது தலைமை செயல் அதிகாரிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

Leave a Reply