- சினிமா, செய்திகள்

வருவாரா…அவர் வருவாரா…

 

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ராகல்பிரீத்சிங்கை கேட்டிருக்கிறார்கள். தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் ராகுல்பிரீத்சிங், ஆரம்பத்தில் தமிழில் `புத்தகம், என்னமோ ஏதோ' படங்களில் நடித்தவர். இந்தப் படங்கள் சரியாகப் போகாத நிலையில் தெலுங்குப் படஉலகம் பக்கம் பார்வையை வீசினார். அங்கே முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்த வாய்ப்புக்கள் அதிரடியாய் அமைய, இப்போது அங்கே நம்பர் ஒன் நாயகி இவர்தான். இப்போதும் கூட தெலுங்கில் அல்லுஅர்ஜூன் நடிக்கும் `சரைனோடு' என்ற பெரிய பட்ஜெட் படத்தில் இவர் தான் நாயகி.
தமிழில் முன்னணி ஹீரோ விஷால். முன்னணி இயக்குனர் மிஷ்கின். இவர்கள் இருவரும் இணையும் முதல் படத்தில் நடிக்க அழைப்பு கிடைத்திருக்கும் நிலையில் அதை ராகுல்பிரீத்சிங் நிச்சயம் தவிர்க்க மாடடார் என்கிறார்கள். முதலில்அறிமுகமான தமிழிலும் முன்னணி நாயகி என்ற இடத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருப்பதை ஏற்கனவே பல பேட்டிகள் வெளியாக வெளிப்படுத்தியவர் ஆயிற்றே. அதனால் சீக்கிரமே மிஷ்கின் இயக்கத்தில் விஷால் ஜோடியாக ராகல்பிரீத்சிங் என்ற அறிவிப்பு வரலாம்.

Leave a Reply