- உலகச்செய்திகள், செய்திகள்

வனாடு தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம்

 

சிட்னி, ஏப். 7:- ஆஸ்திரேலியாவுக்கு கிழக்குப் பகுதியில், தென் பசிபிக் கடற்பிராந்தியத்தில் வனாடு தீவுக்கூட்டம் உள்ளது. இங்கு மொத்தம் 80 தீவுகள் அமைந்திருக்கின்றன. இந்நிலையில், கடந்த ஞாயிறன்று, இங்கு நில நடுக்கம் ஏற்பட்டு, ரிக்டர் அளவுகோலில் அந்த நில நடுக்கம் 7.2 ஆக பதிவானது. இந்நிலையில், நேற்று காலை சுமார்  7 மணியளவில், சோலா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த அதிர்வுகள் ஏற்பட்டன. இருப்பினும் சுனாமி வருவதற்கான வாய்ப்பில்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply