BREAKING NEWS

லண்டனில் ‘துப்பறிவாளன் 2’

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் 2017-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தற்போது அதே கூட்டணியில் துப்பறிவாளன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விஷால் ஜோடியாக ஆஷியா நடிக்கிறார். மேலும் நாசர், ரகுமான், பிரசன்னா, கவுதமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரும் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்க்கும் இப்படத்தின், முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் 40 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பை படகுழு நிறைவு செய்துள்ளது. அதன் அடையாளமாக விஷால் உள்பட நடிகர்கள் அனைவரும் லண்டலில் விமானம் எடுத்த படத்தை வலைகுழுவில் போட்டு இருக்கிறார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *