- செய்திகள், மாநிலச்செய்திகள்

லஞ்சம் வாங்கிய வழக்கில் ராணுவ என்ஜினீயருக்கு 4 ஆண்டு ஜெயில்தண்டனை சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பு

ஜோத்பூர், மார்ச்31-

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள ஸ்ரீகங்காநகர் ராணுவ நிலையில்  பணியாற்றி வந்தவர் பன்சால்.  ராணுவ என்ஜினீயராக இருந்த இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தனது துறைசார்ந்த பில்களை பாஸ் செய்வதற்காக 50 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார். கடந்த 2011-ம்ஆண்டு டிசம்பர் 29-ந்தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக  என்ஜினீயர் பன்சால் மீது சிபிஐ  போலீசார் ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பன்சாலுக்கு 4 ஆண்டுகால கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து  சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  மேலும் இந்த வழக்கில் ஸ்ரீகங்கா நகர் ராணுவ நிலையத்தில் பணியாற்றிய ஆர்.கே. மாத்தூர் என்ற அதிகாரிக்கு 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply