- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

ரோஹித் பயிற்சியில் ஈடுபடவில்லை

மிர்பூர், மார்ச் 1:-

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று இலங்கை அணியை எதிர்த்து தனது 3-வது போட்டியில் விளையாட உள்ள நிலையில் நேற்று அதற்கான பயிற்சியில் ஈடுபட்டது.

வங்கதேசத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளை வென்றுள்ள நிலையில் இன்று இலங்கை அணியுடன் மோதுகிறது. இதற்கான வலைப் பயிற்சியில் நேற்று இந்திய அணி ஈடுபட்டது.

ஆனால் இந்தப் பயிற்சியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஈடுபடவில்லை. ஆகவே இன்று நடைபெற உள்ள ஆட்டத்திலும் அவர் விளையாடுவாரா என்பது கேள்விக் குறியாக உள்ளது.

அதே சமயம் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஷிகர் தவான், மகேந்திர சிங் தோனி இருவரும் இரண்டரை மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டனர். ரோஹித்துக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் எலும்பு முறிவு இல்லை எதுவும் தெரிய வந்துள்ள நிலையிலும் பயிற்சியில் ஈடுபட்டால் வலி அதிகரிக்கும் என்பதால் பயிற்சியில் ஈடுபடவில்லை என்பதாக தெரியவந்துள்ளது.

தவான் பயிற்சியில் ஈடுபட்டாலும் கூட சில கேட்ச்களைப் பிடித்ததோடு கொஞ்சம் பேட்டிங்கிலும் ஈடுபட்டார். ஆனால் பார்த்திவ் படேல் அதிக நேரம் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனாலும் கூட இன்றைய போட்டியிலும் ரஹானேவுடன் துவக்க ஆட்டக்காரராக யார் களம் இறங்க உள்ளார் என்பது தெரியவில்லை.

இதனிடையே நேற்று முன் தினம் மாலை இந்திய அணியினர் டாக்காவில் உள்ள இந்திய தூதர் இல்லத்துக்குச் சென்று இனிமையாக பொழுதைக் கழித்தனர்.

Leave a Reply