- செய்திகள், வணிகம்

ரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது டான் கன்வெர்டிபில் மாடலின் இரண்டு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது. இந்த கார் மொத்தத்தில் 50 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. டான் சில்வர் புல்லட் கலெக்ஷன் என அழைக்கப்படும் புதிய கார் 1920 ரோட்ஸ்டர் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இது வழக்கமான 4 பேர் அமரக்கூடிய இருக்கைகளுக்கு மாற்றாக இரண்டு இருக்கைகளை டைட்டானியம் மற்றும் மெட்டாலிக் சில்வர் பட்ரெசஸ்களை வழங்குகிறது.காரின் உள்புறம் கார்பன் ஃபைபர் டேஷ்போர்டு, குவில்ட் செய்யப்பட்ட லெதர் சென்ட்டர் கன்சோலை சுற்றி வழங்கப்பட்டு இருக்கிறது. இது லெதர் ஜாக்கெட்களை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

புதிய சில்வர் புல்லட் எடிஷனில் 6.6 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி12 மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 571 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இது காரை மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5 நொடிகளில் செலுத்தும் திறன் கொண்டதாகும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

Leave a Reply