- செய்திகள், விளையாட்டு

ரோகித்துக்கு ‘எக்ஸ்-ரே’

 

மிர்பூர், பிப். 29:-
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும், தொடக்கவீரருமான ரோகித் சர்மாவுக்கு காலில் காயம் ஏற்பட்டதையடுத்து அவருக்கு நேற்று எக்ஸ்-ரே எடுத்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆசியக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 ஆட்டத்தில், முகம்மது அமிர் வீசிய ஓவரில் ரோகித் சர்மாவின் இடது காலில் காயம் ஏற்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல் விளையாடிய ரோகித் சர்மா டக்அவுட்டில் வெளியேறினார்.இந்நிலையில், காலில் வலி ஏற்படவே, நேற்று சிகிச்சை எடுத்துக்கொண்டதோடு, எக்ஸ்-ரே எடுத்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த எக்ஸ்-ரேயில் காலில் பெரிய காயம் ஏதும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply