- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

ரெயில்வே பட்ஜெட் சுகமான, சுத்தமான பயணத்துக்கு வழிவகுக்கும்

சென்னை, பிப்.26-
ரெயில்வே பட்ஜெட் சுகமான, சுத்தமான பயணத்துக்கு வழிவகுக்கும் என்று, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள ரெயில்வே பட்ஜெட் பற்றி, தமிழக பா.ஜ.க.தவைர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
மகத்தானது

மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு தாக்கல் செய்துள்ள ரெயில்வே பட்ஜெட் மக்களுக்கான மகத்தான பட்ஜெட், ஏழைகளுக்கான, குழந்தைகளுக்கான பாதுகாப்பான பட்ஜெட். ரெயிலில் பயணம் செய்யும் ஒரு பயணி சுகமான பயணத்துக்கு, பாதுகாப்பான பயணத்துக்கு எதையெல்லாம் ஏங்கி காத்துக்கொண்டிருந்தார்களோ, அவை எல்லாம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. சென்னை ராயபுரம் 4-வது முனையமாக பரிசீலிக்கப்படும் என்பது தமிழக மக்களின் நெடுநாளைய கோரிக்கை பரிசீலிக்கப்பட்டிருப்பது ஆறுதல். குறிப்பாக திருச்சி, நெல்லை நகரங்களை இணைக்கும் மதுரை, விருதுநகர் மார்க்கமாக தினம் திட்டமிடப்பட்டிருக்கும் ரெயில் தென் தமிழக மக்களுக்கு பயன்தரும்.
எதிர்பாா்ப்பு நிறைவேற்றம்

தர்மபுரி வழியாக மதுரைக்கு வாரம்தோறும் இயங்கும் ரெயில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. திருச்சி, மன்னார்குடி ரெயில் நெடு நாளைய எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. திண்டுக்கல், குமரி ரெயில் போடிநாயக்கனூரையும் இணைத்து செல்லும் தடம் சபரிமலை பக்தர்களுக்கு உதவியாக இருக்கும். செங்கோட்டை, கொல்லம் வழிதடமும் மக்களுக்கு பயன்தரும்.
சுகமான பயணத்துக்கு

தமிழகத்துக்கு புதிய வழிதடங்கள் நிறைவேற்றப்படவில்லை என்ற விமர்சனங்கள் வருகின்றன. ஆனால், கட்டணம் ஏற்றாமல், சுமையை ஏற்றாமல் சுவையான பயணத்துக்கு வழிவகை செய்து இருக்கிறது ரெயில்வே பட்ெஜட். சொல்வதையே செய்வோம். செய்ய முடிந்ததையே அறிவிப்போம் என்ற நிலைப்பாடு பாராட்டுக்கு உரியதாகவே கருதப்படுகிறது. ஆக, இந்த பட்ஜெட் சுகமான, சுத்தமான பயணத்துக்கு வழிவகை செய்யும் பட்ஜெட். அதற்கு வழிவகை செய்த அமைச்சர் சுரேஷ்பிரபு பாராட்டுக்கு உரியவரே…அவருக்கு நம் பிரதமர் அளித்து இருக்கும் பாராட்டும் நியாயமானதே. இந்த பட்ஜெட்டும் நியாயமானதே.
இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.

Leave a Reply