- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழக திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அம்சங்கள் இடம்பெற வேண்டும்

சென்னை, பிப்.14-
ெரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்று, ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ரெயில்வே பட்ஜெட்டில்…
மத்திய ெரயில்வேதுறை அமைச்சர் 2016-17 ஆம் ஆண்டிற்கான ெரயில்வே பட்ஜெட்டை இந்த மாதம் இறுதியில் தாக்கல் செய்ய இருக்கிறார். அதில், தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அம்சங்கள் இடம்பெற வேண்டும்.  பொது மக்களின் குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன் கருதி ெரயில்வே பட்ஜெட்டில் முக்கிய அம்சங்களை இடம்பெறச் செய்ய வேண்டும்.
நிலுவையில் உள்ள திட்டங்கள்
*தமிழ்நாட்டில், தமிழகத்துக்காக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, திண்டிவனம் – திருவண்ணாமலை ெரயில் பாதைக்கான ஆய்வுப் பணிகள் முடிந்து பூர்வாங்க வேலைகள் ஆரம்பித்து பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
*சென்னை – மதுரை இரட்டை வழிப்பாதைத் திட்டம் 8 ஆண்டுகளாக நடைபெறாமல் திண்டுக்கல் விழுப்புரம் பகுதியில் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ெரயில் போக்குவரத்தை தொடங்கியிருக்க வேண்டிய இத்திட்டம் இன்னும் கால தாமதமாகிறது.
இரட்டை வழிப்பாதை
*மதுரை – கன்னியாகுமரி இரட்டை வழிப்பாதைத் திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. மதுரை – போடி அகல ெரயில்பாதைத் திட்டம் 2010 – ல் ஆரம்பிக்கப்பட்டு நிதி போதுமான அளவில் ஒதுக்கப்படாமல் பணிகள் நடைபெறாமல் உள்ளது.
*அருப்புக்கோட்டை வழியாக மதுரை தூத்துக்குடிக்கான இரட்டை வழிப்பாதை முடிக்கப்படாமல் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

புதிய திட்டங்கள்
ஏற்கனவே அறிவித்த திட்டங்களை விரைந்து செயல்படுத்திடும் வகையிலும், அதேபோல பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்கும் வகையிலும், பயணிகள் மற்றும் சரக்குகள் கட்டணத்தை உயர்த்தாமலும், ெரயில்வேயில் வருமானத்தைப் பெருக்க விளம்பரங்கள் போன்ற உத்திகளை கையாளும் விதமாகவும் அறிவிப்புக்களை இடம் பெற செய்ய வேண்டும்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்து, அந்த தொகையினை ெரயில்வேயின் வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்தி, திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.

Leave a Reply