- செய்திகள், வணிகம்

‘ரெனால்ட்’, ‘நிசான்’ நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி, டிச. 15:-
‘நிசான் குரூப் ஆப் இந்தியா’ மற்றும் ‘ரெனால்ட் இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் தங்களின் அனைத்து ரக கார்களின் விலையை வரும் ஜனவரி மாதத்தில் இருந்து 3 சதவீதம் உயர்த்தப் போவதாக நேற்று அறிவித்துள்ளன.

உள்ளீட்டுப் பொருட்களின் விலை உயர்வு, சந்தையில் கடுமையான போட்டிச் சூழலை சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஆகிய காரணங்களால், விலையை உயர்த்த உள்ளதாக அந்த இரு நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாருதி சுஸூகி நிறுவனம் ரூ. 20 ஆயிரம் வரையிலும், ஹூன்டாய் மோட்டார் நிறுவனம் ரூ. 30 ஆயிரம் வரையிலும் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து கார்கள் விலையை உயர்த்தப்போவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply