- செய்திகள், வணிகம்

ரூ.4,600 கோடி அன்னிய முதலீடு வெளியேற்றம்

 

அன்னிய முதலீட்டாளர்கள் இம்மாதம் 1 முதல் 18-ந் தேதி வரை நம் நாட்டு  மூலதன சந்தைகளில் ரூ.4,503 கோடிக்கு பங்குகளையும், ரூ.96 கோடிக்கு கடன்பத்திரங்களையும் விற்பனை செய்தனர். இதனையடுத்து  மூலதன சந்தைகளில் (பங்கு, கடன்பத்திரங்கள்) அவர்கள் விலக்கிய நிகர முதலீடு ரூ.4,599 கோடியாக உள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை சரிவு, உலக பொருளாதார மந்த நிலை குறித்த அச்சங்களால் அன்னிய முதலீட்டாளர்கள் நம் நாட்டு மூலதன சந்தையில் இருந்து முதலீட்டை திரும்ப  பெற்றுள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை இந்திய மூலதன சந்தையில் இருந்து ரூ.13,414 கோடியை அவர்கள் திரும்ப பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் பங்குகளில் ரூ.17,806 கோடியும், கடன்பத்திரங்களில் ரூ.45,856 கோடியும் அன்னிய முதலீட்டாளர்கள் நிகர முதலீடு செய்து இருந்தனர்.

Leave a Reply