- செய்திகள், வணிகம்

ரூ.3,500 கோடியை திரும்ப பெற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

புதுடெல்லி, ஜன.18:-
ஜனவரி 1 முதல் 15-ந் தேதி வரை அன்னிய முதலீட்டாளர்கள் நம் நாட்டு பங்குச் சந்தைகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டில் ரூ.3,500 கோடியை திரும்ப பெற்றுள்ளனர். அதே வேளையில் கடன்பத்திரங்களில் முதலீட்டை அதிகரித்துள்ளனர்.

பங்குகள்

இந்த ஆண்டில் கடந்த 15-ந் தேதி வரை அன்னிய முதலீட்டாளர்கள் மொத்தம் ரூ.36,368 கோடிக்கு பங்குகளை வாங்கினர். ரூ.39,852 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்தனர். ஆக, அவர்கள் பங்குகளை முதலீடு செய்ததை காட்டிலும் திரும்ப பெற்ற தொகை அதிகமாக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வரை அவர்கள் பங்குகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டில் ரூ.3,483 கோடி திரும்ப பெற்றுள்ளனர்.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, சீன பொருளாதார மந்த நிலை, பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை சரிவு போன்றவற்றால் அன்னிய முதலீட்டாளர்கள் நம் நாட்டு பங்குகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டை திரும்ப பெற்று வருகின்றனர்.
அன்னிய முதலீட்டாளர்கள் கடன்பத்திரங்கள் தொடர்ந்து முதலீட்டை அதிகரித்து வருகின்றனர். அவர்கள் இந்த  ஆண்டில் இதுவரை அதில் ரூ.3,239 கோடி நிகர முதலீடு செய்துள்ளனர்.

Leave a Reply