- செய்திகள், வணிகம்

ரூ.27 ஆயிரம் கோடி திரட்டிய நிறுவனங்கள்

பங்குகளாக மாற்ற முடியாத கடன்பத்திரங்கள் வெளியீட்டில்
இந்த நிதி ஆண்டில் இதுவரை (பிப்ரவரி 4-ந் தேதி நிலவரப்படி)  நம் நாட்டு நிறுவனங்கள் பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திரங்கள் வெளியீட்டில் மொத்தம் ரூ.27 ஆயிரம் கோடி திரட்டி உள்ளன. சென்ற நிதி ஆண்டில் நிறுவனங்கள் இந்த வழிமுறையில் மொத்தம் ரூ.9,713 கோடி திரட்டி இருந்தன. விரிவாக்க நடவடிக்கைகள், நடைமுறை மூலதன செலவுகள், இதர பொதுவான நிறுவன செலவினங்களுக்கு தேவையான நிதியை பங்கு வெளியீடு, கடன் பெறுதல் உள்பட பல்வேறு வழிமுறைகளில் நிதி திரட்டுகின்றன. அதில், பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திரங்கள் வெளியீடும் அடங்கும்.

Leave a Reply