- செய்திகள், வணிகம்

ரூ.12 ஆயிரம் கோடி நிதி திரட்டிய நிறுவனங்கள்

இந்த நிதி ஆண்டின் முதல் 7 மாதங்களில் (ஏப்ரல்-நவம்பர்) நம் நாட்டு நிறுவனங்கள் தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கி (கியூ.ஐ.பி.) மொத்தம் ரூ.12,658 கோடி திரட்டி உள்ளன. இது சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 41 சதவீதம் குறைவாகும். அப்போது நிறுவனங்கள் இந்த வழிமுறையில் மொத்தம் ரூ.21,402 கோடி  திரட்டி இருந்தன. பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி வெளியிட்டு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.  விரிவாக்க நடவடிக்கைகள், கடனை திருப்பி செலுத்த, நடைமுறை மூலதன தேவை உள்பட பல்வேறு காரணங்களுக்காக இது போன்ற வழிமுறையில் நிறுவனங்கள் நிதி திரட்டுகின்றன.

Leave a Reply