- செய்திகள், வணிகம்

ரூ.117 கோடிக்கு தேயிலை வாங்கிய பாகிஸ்தான் கடந்த நிதி ஆண்டில்

கடந்த 2015-16-ம் நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல்-பிப்ரவரி) நம் நாட்டில் இருந்து பாகிஸ்தான், எகிப்து உள்பட உலக நாடுகளுக்கு ரூ.3,885 கோடிக்கு தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 11 சதவீதம் அதிகமாகும். கணக்கீடு காலத்தில் பாகிஸ்தான் நம் நாட்டில் இருந்து ரூ.117 கோடிக்கு தேயிலை இறக்குமதி செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 59 சதவீதம் அதிகமாகும். அப்போது பாகிஸ்தான் நம்மிடம் இருந்து ரூ.111 கோடிக்கு மட்டும் தேயிலை இறக்குமதி செய்து இருந்தது.

சர்வதேச அளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. அதே சமயம் தேயிலை நுகர்வில் நம் நாடு முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply