- செய்திகள், வணிகம்

ரிசர்வ் வங்கி பெயரில் போலி இ-மெயில்

மும்பை, ஏப்.12:-

போலியாக எனது பெயரில் அல்லது ரிசர்வ் வங்கி பெயரில் பணம் கேட்டு வரும் மோசடி  இ-மெயில்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் ரகுராம் ராஜன் எச்சரிக்கை செய்துள்ளார்.

மும்பையில் நேற்று யூனிபீல்டு பேமண்ட்ஸ் இன்டர்பேஸ் சிஸ்டம் அறிமுக விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பேசுகையில் கூறியதாவது:-

கடந்த காலங்களில்,  ரிசர்வ் வங்கி அல்லது கவர்னர் பெயரில், உங்களுக்கு லாட்டரியில் பரிசு கிடைத்துள்ளது என்ற மோசடி தகவல் அடங்கிய மோசடியாளர்களின் போலி இ-மெயில்கள் மக்களுக்கு வந்து இருக்கும். உங்களுக்கு ரூ.50 லட்சம் பணத்தை அனுப்ப உள்ளோம். ஆனால் அதற்கு நீங்கள் அந்த பணத்தை பெற பணபரிவர்த்தனை கட்டணமாக ரூ.20 ஆயிரத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தும்படி மோசடியாளர்கள் கேட்டுக்கொள்வர்.

ரிசர்வ் வங்கி எப்போதும் பணம் அனுப்பவும் செய்யாது, அதுபோல் உங்கள் பணத்தையும் கேட்காது. எனவே இது போன்ற மோசடியான போலி இ-மெயில்களை டெலிட் செய்து விடுவது நல்லது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply