- செய்திகள்

ராணுவத்துக்கு இன்று ஆட்கள் தேர்வு திருவண்ணாமலையில் 31-ந் தேதி வரை நடக்கிறது…

திருவண்ணாமலை, ஆக. 19-
திருவண்ணாமலையில் ராணுவத்துக்கு இன்று ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது வருகிற 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
ஆள் சேர்ப்பு
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று (வெள்ளி) முதல் வருகிற 31-ந் தேதி  இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம்  நடைபெறுகிறது.
22 ஆயிரம் இளைஞர்கள்
அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சா.பழனி, ராணுவ அதிகாரி கலோனல் பிட்ரே உடன் ஆய்வு செய்தார். இந்த ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள 22 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஆட்சியர் ஆய்வு
குடிநீர், கழிப்பறை, மின்சாரம், விளையாட்டு மைதான அமைப்புகள்  மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியர் (பொறுப்பு) சா.பழனி கூறியதாவது:-
இந்த முகாமில் திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவள்ளுர் மற்றும் புதுச்சேரி ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது என்றார்.
ராணுவ அதிகாரி
இந்த ஆய்வின் போது ராணுவ அதிகாரி கலோனல் பிட்ரே,மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குநர் காளிதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ந.குணசேகரன், திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர் நல வாரிய உதவிஇயக்குநர் லெப்.கர்ணல் க.ஞானசேகர், தாசில்தார் சி.பன்னீர்செல்வம், தி.மலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வெ.சிவக்குமார் மற்றும் பல்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

புட்நோட்
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற 31-ந்தேதி வரை  ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர்(பொறுப்பு) பழனி நேரில் ஆய்வு  செய்தார். உடன் ராணுவ அதிகாரி கலோனல் பிட்ரோ மற்றும்  அதிகாரிகள் உள்ளனர்.

Leave a Reply