- தேசியச்செய்திகள்

ராஜீவ் காந்தி பிறந்தநாள் : பிரதமர் மோடி அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவரும், முன்னாள் பிரதமருமான மறைந்த ராஜீவ் காந்தியின் 77-ஆவது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

காங்கிரஸ் கட்சியினர் இந்த நாளினை ‘சத்பவன திவாஸ்’ என்ற பெயரில் கொண்டாடினர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலிகள்’ என்று பதிவிட்டுள்ளார்.1944ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி பிறந்த ராஜீவ் காந்தி, நாட்டின் இளம் பிரதமராக 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதவியேற்றார். 1989ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி வரை பிரதமர் பதவியில் இருந்தார்.

1991ம் ஆண்டு மே 21ம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியபோது, விடுதலைப்புலிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

Leave a Reply