- செய்திகள், மாநிலச்செய்திகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் காஷ்மீர் மாநில மாணவர்கள் 9 பேர் கைது

ஜெய்ப்பூர், ஏப்.7-

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையோன அரையிறுதிப்  போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றபோது ராஜஸ்தான் பல்கலைக்கழக விடுதியில் மூண்ட மோதல் எதிரொலியாக  காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 9 ேபரும், விடுதி வார்டனும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மாணவர்கள் மோதல்

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் ேபாட்டியின் அரையிறுதிப்போட்டி கடந்த 31-ந்தேதி நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றபோது, ராஜஸ்தான் மாநிலம் சித்தர்கார் மாவட்டத்திலுள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் தாங்கள் தங்கியிருக்கும் விடுதியில்  மோதிக்ெகாண்டனர்.

9 பேர் கைது

இந்த மோதலில்  மாணவர் ஒருவர் காயமடைந்தார். இந்த மோதல் தொடர்பாக காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 9 மாணவர்களையும் விடுதி வார்டனையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த மோதலில் சம்பந்தப்பட்ட 9 பேர்  உள்பட ெமாத்தம் 16 மாணவர்களை வரும் 25-ந்தேதி வரை பல்கலைக்கழக நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் 16 பேரும் வரும் 24ம் தேதி தங்கள் பெற்றோருடன் பல்கலைக்கழகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்ப்பட்டுள்ளது. மேலும் இந்த மாணவர்கள் வரும் 25-ந்தேதி வரை விடுதியிலும் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தகராறு தொடர்பாக விடுதி வார்டன் நஜ்புல்லா ஷஹம் என்பவர் மீதும் பல்கலைகழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply