- செய்திகள், மாநிலச்செய்திகள்

ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் தற்கொலை

 

ஜெய்பூர், பிப்.7-
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ‘பி.எச்.டி.’ ஆராய்ச்சி பட்டப்படிப்பு படித்து வந்தவர், மோகித் சவுகான். தனது விடுதி அறையில் நேற்று முன்தினம் மாலை மோகித் சவுகான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று மோகித் சவுகானின் உடலை கைப்பற்றி, பரிசோதனைக்காக மருத்துவ மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவருடைய பெற்றோருக்கு, இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.
தற்கொலை குறித்த கடிதம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மாணவர் மோகித் சவுகான் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அவருக்கு வழிகாட்டியாக இருந்த பேராசிரியர், மாணவரை துன்புறுத்தி வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
—-

Leave a Reply