- செய்திகள், மாநிலச்செய்திகள்

ராஜஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஜெய்ப்பூர், ஏப்.23:-
ராஜஸ்தான் மாநிலத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்புத் தெரிவித்து அங்குள்ள மான் சிங் ஸ்டேடியத்தின் முன் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிரத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அந்த மாநில உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டங்களை தங்கள் மாநிலத்தில்நடத்த ராஜஸ்தான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ராஜஸ்தானில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் இது போன்ற `பொழுது போக்கு' நிகழ்ச்சியை நடத்துவதை மாநில அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தன்வர் தலைமையிலான இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply