- செய்திகள், மாநிலச்செய்திகள்

ராஜஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை நடத்த தடை விதிக்க வேண்டும் பொது நல மனு தாக்கல்

ஜெய்ப்பூர், ஏப்.22:-
ராஜஸ்தானில் நிலவும் வறட்சியைக் கருத்தில் கொண்டு அந்த மாநிலத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதிக்க கூடாது என்று மாநில உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக மகாராஷ்டிரத்திலும் இதே போல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்ற அந்த மாநில உயர்நீதிமன்றம் ஏப்ரல் 30-ம் தேதிக்கு பிறகான போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட்டது. இந்த நிலையில் அதே போன்ற காரணத்துக்காக ராஜஸ்தான் மாநில போட்டிகளை மாற்றக் கோரி பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் மகேஷ் பரீக் தாக்கல் செய்த  மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம் ஐபிஎல் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave a Reply