- செய்திகள்

ராஜபக்சே மூத்த மகன் கைது…

 

கொழும்பு, ஆக.17-

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகன் நமல் ராஜபக்சே (30). இவருக்கு சொந்தமான நிறுவனத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பொருளாதார குற்ற பிரிவு விசாரணை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை அதிகாரிகள் கொழும்பு மாஜிஸ்திரேட்டு லங்கா ஜெயரத்னே முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, நமலை வருகிற 22-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் நமலின் இளைய சகோதரர் யோசிதா ராஜபக்சேவும் நிதி முறைகேடு புகாரில் சிக்கி கைதானார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ஜாமீன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

————-

Leave a Reply