- செய்திகள், மாவட்டச்செய்திகள்

ரத்து செய்யக்கோரி சரத்குமார் வழக்கு நடிகர் சங்கம் அனுப்பிய நோட்டீசை

சென்னை, ஏப்.12-
தென்னிந்திய நடிகர் சங்கம் விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய கோரி நடிகர் சரத்குமார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வரவு-செலவு கணக்கு
நடிகர் சரத்குமார் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் வரவு – செலவு கணக்குகள் குறித்து விவாதித்துள்ளனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு வரவு -செலவு கணக்கை முறைப்படி தாக்கல் செய்யவில்லை என்று  கூறி இதற்கு விளக்கம் தருமாறு எனக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது.
ரத்து செய்ய வேண்டும்
அதில் தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று விளக்கம் கேட்டுள்ளது. வேண்டுமென்றே இந்த நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. எனவே இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை 12வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் நீதிபதி டேனியல் அருள்தாஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு பதில் தருமாறு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த மனு மீண்டும் நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply