- செய்திகள், விளையாட்டு

ரசூல், ராஹுல் ஹைதராபாத் அணியிலிருந்து பெங்களூர் அணியில் இணைந்தனர்

புதுடெல்லி, பிப்.17:-

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியிலிருந்து பேட்ஸ்மேன் லோகேஷ் ராஹுல், ஆல்-ரவுண்டர் பர்வீஸ் ரசூல் இருவரும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இணைந்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வலுவானதாக இருக்க வேண்டும் என்று விரும்பிய காரணத்தால் இந்த இரண்டு பேரையும் அந்த அணியில் இணைத்துக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

இவர்கள் இருவரும் தற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

ராஹுல் சிறந்த பேட்ஸ்மேன் என்பதாலும் ரசூல் சிறந்த ஆல்-ரவுண்டர் என்பதாலும் பெங்களூரு அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் சுக்லா குறிப்பிட்டார்.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பெங்களூரு அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா ராஹுலின் பன்முகத் திறமை காரணமாக தங்களது அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார் என்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த இவர் மீண்டும் பெங்களூரு அணிக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சியான ஒன்று என்றும் குறிப்பிட்டார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 9-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Leave a Reply