- செய்திகள்

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி…

 

லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்த படம் கபாலி. பா.ரஞ்சித் இயக்கிய இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். கடந்த வெள்ளியன்று ரிலீசான இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலைத் தந்து வருகிறது. கபாலி படவேலைகள் முடிந்ததும் ஓய்வுக்காக அமெரிக்கா பறந்த ரஜினி கடந்த ஞாயிறன்று இரவு சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் ரசிகர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்ட ரஜினி, ‘‘கபாலி படத்தில் ஓய்வில்லாமல் நடித்தால், உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு தேவைப்பட்டது. அதனால்தான், ஓய்வுக்காக அமெரிக்கா சென்றேன். அங்கு ஓய்வில் இருந்தாலும், கபாலி வெற்றிச் செய்தியை அங்கிருந்தே கேள்விப்பட்டேன். மகிழ்ச்சியாக இருந்தது.

கபாலி படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அமெரிக்காவில் கேட்ட வெற்றிச் செய்தியை இப்போது நேரில் காண்கிறேன்.’’ என்று தெரிவித்தார்.

Leave a Reply