- செய்திகள், வணிகம்

ரகுராம் ராஜனுக்கு சம்பளம் ‘கம்மி’தான் சக்தி வாய்ந்த பதவிதான் ஆனாலும்…..

புதுடெல்லி, ஏப்.25:-

சக்தி  வாய்ந்த பதவியில் உள்ளபோதிலும், ரிசர்வ் வங்கியில் அதிக அளவு சம்பளம்  வாங்குபவர் ரகுராம் ராஜன் அல்ல. அவரை காட்டிலும் குறைந்தபட்சம் 3 பேர் அதிக  சம்பளம் வாங்குகின்றனர். ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நல ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை  சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் சம்பளம் குறித்து  கேள்வி கேட்டு இருந்தார். இதனையடுத்து ரிசர்வ் வங்கி தனது வலைதளத்தில் 2015 ஜூன்-ஜூலை மாத சம்பள அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மாதம்  சம்பளமாக ரூ.1.98 லட்சம் பெறுகிறார். இதில் அடிப்படை சம்பளம் ரூ.90  ஆயிரமும், அகவிலைப்படி ரூ.1.01 லட்சமும், மற்றவை ரூ.7 ஆயிரமும் அடங்கும்.
அதே  வேளையில், ரகுராம் ராஜனை காட்டிலும் கோபாலகிருஷ்ண சீதாராம் ஹெக்டே (ரூ.4 லட்சம்),  அண்ணாமலை அரப்புளி கவுண்டர் (ரூ.2,20,355), வி கந்தசாமி (ரூ.2.1 லட்சம்)  ஆகியோர் அதிக சம்பளம் பெறுகின்றனர். இருப்பினும் இவர்கள் 3 பேரும் தற்சமயம் ரிசர்வ் வங்கியில் பணியில் உள்ளனரா என்பது உறுதிப்படுத்தவில்லை. மேலும், அவர்கள் பதவி குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

Leave a Reply