- செய்திகள், வணிகம்

யு.கே. சின்ஹாவுக்கு பதவி காலம் நீடிப்பு

 

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் தலைவர்  யு.கே. சின்ஹாவின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீடிப்பு செய்துள்ளது. கடந்த 2011 பிப்ரவரி 18-ந் தேதி செபியின் தலைவராக முதலில் 3 ஆண்டுக்கு அவரை முந்தைய ஐ.மு. கூட்டணி அரசு நியமனம் செய்தது. அதற்கு பிறகு மேலும் 2 ஆண்டுக்கு அவரது பதவி காலம் நீடிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் செபியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க குழு ஒன்றை மத்திய அரசு நியமனம் செய்தது. ஆனால் இந்த குழு எந்தவொரு பெயர் பட்டியலையும் அளிக்கவில்லை. இதனையடுத்து, யு.கே. சின்ஹாவின் பதவி காலத்தை 2017 மார்ச் 1-ந் தேதி நீட்டிப்பு செய்துள்ளது. அடுத்த கட்ட அறிவிப்பு வரும் வரை அவர் இந்த பதவியில் இருப்பார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply