- அரசியல் செய்திகள், செய்திகள்

யாராலும் அதிமுகவை அசைக்க முடியாது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும், யாராலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.

திருச்சிக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொட்டியம் வானப் பட்டறை மைதானத்தில் பொதுமக்களிடம் பேசியதாவது :-

ஒப்பற்ற தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அதிமுக. திமுக தலைவர் ஸ்டாலின் எந்த திட்டமும் நடக்க வில்லை என்று பொய் கூறி வருகிறார். அரசு கொடுத்துள்ள ஒவ்வொரு திட்டங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

எந்த காலத்திலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அது ஒருபோதும் நடக்காது .முதலில் அவர் அவரது கட்சியை கவனிக்கவும், யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஸ்டாலின் ஒன்றும் உழைத்து பழக்கப்பட்டவர் அல்ல.

ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுக வை அசைக்க கூட முடியாது. அதற்கான இடத்தை அதிமுகவில் ஒருவரும் இடம் கொடுக்க மாட்டார்கள். உழைப்பவர்களுக்கு என்றும் வீழ்ச்சி இல்லை. அவர் ஒன்றும் உழைத்து முன்னேற வில்லை. மற்றவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்.

திமுக தலைவருக்கு, தொண்டர்களுக்கு நல்ல எண்ணம் கிடையாது. பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என்றும் சொல்வார்கள். அது ஸ்டாலினுக்கு தான் பொருந்தும்.

நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று பொய் சொல்லி ஆட்சி பொறுப்பேற்று, அடக்கம் செய்வதற்கு கூட இடம் கொடுக்கவில்லை.

அதிமுகவை பொறுத்தவரையில் மடியில் கனமில்லை,மனதில் பயமில்லை. ஆனால் திமுகவை பொறுத்தவரையில் அப்படி இல்லை.

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு அது திமுக தான் 50 ஆண்டு கால காவிரி நதிநீர் பிரச்னையை தீர்த்த ஒரே அரசு அதிமுக அரசு. திமுகவை பொறுத்தவரையில் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.

அதிமுக அரசு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டத்தை திமுக கொண்டு வந்தது போல ஸ்டாலின் பேசி வருகிறார்.ஒன்று திட்டத்தை பற்றி குறை கூறுவது இல்லை என்றால் தாங்கள் கொண்டு வந்ததாக பேசிக்கொள்வது அதை தவிர அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது.

தமிழகத்தில் தற்போது 41 சதவீதம் அரசு பள்ளியில் தான் மாணவர்கள் பயில்கின்றனர்.

முதியோர் உதவித்தொகை5 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்று அறிவித்து தற்போது வரை 90 சதவீதம் கொடுத்து உள்ளோம் என்றார்.

Leave a Reply