- கடலூர், செய்திகள், மாவட்டச்செய்திகள்

யானை தாக்கி கல்லூரி மாணவர் பலி கூடலூரில் பரிதாபம்…

கூடலூர் ஏப்.17-
கூடலூர் அருகே யானை தாக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
யானை அட்டகாசம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 2 மாத காலத்தில் யானை மற்றும் சிறுத்தை தாக்கி 4 பேர் பலியாகி விட்டனர். இதையடுத்து வன விலங்குகள் மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு வராமல் தடுக்கவும், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் யானைகளை பிடிக்கவும் வலியுறுத்தி கடையடைப்பு, மறியல் போன்ற போராட்டங்களை பொதுமக்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த ஒற்றை கொம்பு யானை தாக்கியதில் ஒரு கல்லூரி மாணவர் பலியானார். இதுபற்றிய விபரம் வருமாறு:
கூடலூர் அருகே உள்ள பந்தலூர் தாலுகா சேரம்பாடியை சேர்ந்தவர் சாதிக். இவரது மகன் சாபி (19). கல்லூரி மாணவர். பாலவாடி பகுதியை சேர்ந்தவர் செய்து இவரது மகன் சானு. இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கண்ணம்பாடி என்ற பகுதியில் பேசி கொண்டு இருந்தனர்.
யானை தாக்கியது
அப்போது அங்கு வந்த ஒற்றை கொம்பு யானை திடீரென அவர்களை தாக்கியது. 2 பேரையும் துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால் யானை அங்கிருந்து ஓடியது.

பின்னர் காயம் அடைந்த 2 பேரையும் பொதுமக்கள் மீட்டு கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேம்பாடி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் சாபி இறந்து விட்டார். படுகாயமடைந்த சானு கோழிக்கோடு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடரும் யானைகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.

Leave a Reply