- செய்திகள், மாநிலச்செய்திகள்

‘மோடியை விட, நான் பெரிய தேச பக்தன்’ சொல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி, மார்ச்.1-

‘‘பிரதமர் மோடியை விட, நான் மிகப் பெரிய தேச பக்தன்’’ என்று டெல்லி முதல்- அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
பா.ஜனதாவுக்கு எதிராக..
என் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு உள்ளது.  தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவாக நான் குரல் எழுப்பினேன். இதனால்தான் நான் அவர்களுக்கு (பா.ஜ.க.) தேசத்துக்கு எதிரானவனாக பார்க்கப்படுகின்றேன். இதுபோன்ற வழக்குகளால் என் குரலை ஒடுக்க முடியாது.

இதனை எதிர்த்து நான் தொடர்ச்சியாக போராடுவேன். நாட்டை பிளவுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், தேச நலனுக்கு எதிராக குரல் எழுப்பிய நபர்கள் யார்? காஷ்மீர் பிரிவினைவாதிகள்தானே. நான் கேட்கிறேன் அவர்கள் மீது ஏன் நடவடிக்ைக எடுக்கவில்லை.?
தேச பக்தன்
அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மெகபூபா முப்தி கோபப்படுவார். நமது ராணுவ வீரர்கள் ஒவ்வொரு நாளும் எல்லையில் மடிகிறார்கள். ஆனால் இதனை மறந்து விட்டு காஷ்மீரில் அரசு அமைப்பதில்தான் பா.ஜனதா கவனம் செலுத்துகிறது.
காஷ்மீரில் ஆட்சி அமைப்பதற்காகத்தான் மோடிஜி தேச விரோதிகளை பாதுகாக்கிறார். பிரதமர் மோடியை விட நான் மிகப்பெரிய தேச பக்தன். இவ்வாறு அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.
தேசத்துரோக வழக்கு

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா எம்.பி., அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர்கள் ஆனந்த் சர்மா, அஜய் மக்கான், கல்லூரி தலைவர் கன்னையா குமார், மாணவர் உமர் காலித் உள்ளிட்டோர் தேச நலனுக்கு எதிரான நடந்த கொண்டனர் என்று வழக்கறிஞர் ஜனார்தன் கவுத் என்பவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

புகாரை விசாரித்த ஐதராபாத் நீதிமன்றம் மேலே குறிப்பிட்ட நபர்கள் மற்றும் சிலர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு ெசய்ய உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் மீது நேற்று முன்தினம் தேசத்துரோக வழக்கு பதிவு ெசய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply