- செய்திகள், விளையாட்டு

மே.இ.தீவுகள் ‘கேப்டனுக்கு மரியாதை’ டி20உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த

ஆன்டிகுவா, ஏப். 7:-

டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை புரிந்த மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேப்டன் டேரன் சமிக்கு மரியாதை செலுத்தி பெருமைப்படுத்தும் வகையில், அவரின்  சொந்த நகரான செயின்ட் லூசியாவில் உள்ள மைதானத்துக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு செயின்ட் லூசியாவில் கிரிக்கெட் மைதானம் ‘ தி பியூஸ்ஜோர் கிரிக்கெட் மைதானம்’ என்ற அழைக்கப்பட்டது. இனி ‘ டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம்’ என்று அழைக்கப்படும் என அந்நாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த பெருமை செயின்ட் லூசியாவில் பிறந்த ஜான்சன் சார்லசுக்கும் தகுதியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேற்கியத்தீவுகள் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், “ செயின்ட் லூசியா நகரின் பிரதமர் கென்னி டி ஆன்டனி, டி20 உலகக்கோப்பையை  வென்ற அணி வீரர்கள் சார்லஸ், கேப்டன் சமிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். தங்கள் பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்த இருவருக்கும் வாரியம் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படுகிறது. நாட்டுக்குபெருமை சேர்த்த சமிக்கு, அவரின் சொந்த ஊரில் உள்ள மைதானத்துக்கு அவரின் பெயர் வைக்கப்படுகிறது '' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply