- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

மேற்கு இந்திய தீவுகளுக்கு 122 ரன்கள் இலக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில்

நாக்பூர், மார்ச் 26-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 122 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தென் ஆப்பிரிக்கா பேட்டிங்

20 ஓவர் உலக கோப்பையின் சூப்பர் 10 சுற்றில் நேற்று தென் ஆப்பிரிக்காவும், மேற்கு இந்திய தீவுகள் அணியும் மோதின. நாக்பூர் விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில், டாசை வென்ற மே.இ.தீவுகள் பீல்டிங்கை தேர்வு செய்தது.தொடக்க ஆட்டக்காரர்களாக அம்லா, டி காக் களம் இறங்கினர். ஒரு பந்துக்கு ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அம்லா ரன் அவுட் ஆகி வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து கேப்டன் டுபிளிசிஸ் களம் கண்டார். அவரும் பெரிதாக சோபிக்கவில்லை.
தடுமாற்றம்
9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரூசெல் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்து களம் கண்ட ரொசெல் ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில் கெய்ல் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த டிவில்லியர்ஸ் 10 ரன்களிலும், மில்லர் ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
எனினும் ஒருபுறம் தொடக்க ஆட்டக்காரர் டிகாக் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவர் 47 ரன்கள் (46 பந்துகள்) எடுத்திருந்த நிலையில் ரூசெல் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆகி வெளியேறினார். இதனால் ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 100 ரன்களை கடக்குமா? என்ற சந்தேகம் வந்தது.
122 ரன்கள்
இந்த நிலையில் விய்சி சிறப்பாக ஆடி 28 ரன்கள் எடுத்தார். மோரிசும் தன் பங்குக்கு 16 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்தது. மே.இ.தீவுகள் அணியில் சிறப்பாக பந்து வீசி ரூசெல், கெய்ல், பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
———-

Leave a Reply