- செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது…

 

மேட்டூர், ஜூலை 23-

மேட்டூர் அணைக்கு நேற்றுமுன்தினம் காலை 8 மணி நிலவரப்படி 9 ஆயிரத்து 48 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. ஆனால் நேற்று காலை 8 மணிக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 543 கன அடியாக குறைந்தது. தற்போது அணையின் நீர் மட்டம் 55,22 அடியாக உள்ளது.

நேற்று முதல் 3 நாட்களுக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது. இதனால் பலத்த மழை பெய்து கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் நீர் மட்டம் உயரும் என்றும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply