- செய்திகள்

மேகி நூடுல்ஸ் முதல் இடத்தை பிடித்தது விட்ட இடத்தை தொட்டது…

புதுடெல்லி, ஆக.25-
மேகி நூடுல்ஸ் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. இதனால் மந்த நிலையை தாண்டி பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தற்போது அது இழந்து நின்ற சந்தையை தொடடு முன்னேறி உள்ளது.
நூடுல்ஸ்

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் மிக முக்கிய வர்த்தகமாக இருந்த மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் அதிகளவிலான நச்சுத்தன்மை உள்ளதைத் தொடர்ந்து இதன் தயாரிப்புக்கும், விற்பனைக்கும் மத்திய அரசு மற்றும் இந்திய உணவு கட்டுப்பாட்டு அமைப்பு முழுமையாகத் தடை விதித்தது.

முதல் இடத்தை பிடித்தது

இதனால் இந்திய நூடுல்ஸ் விற்பனை சந்தையில் மூடிச் சூடா மன்னாகத் திகழ்ந்த மேகி மள மளவெனச் சரிந்து 75 சதவீத வர்த்தகத்தை இழந்தது நெஸ்லே இந்தியா. ஜூன் மாதத்தில் தடைகளை மக்கள் மத்தியில் மீண்டும் நன்மதிப்பைப் பெற்ற மேகி நூடில்ஸ் தான் இழந்த முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

நெஸ்லே இந்தியா இந்நிறுவன தயாரிப்புகள் இந்திய சந்தையில் அதிகளவில் இருந்தாலும், மேகி நூடுல்ஸ் மையமாக வைத்தே பிற பொருட்கள் விற்பனை செய்யட்டு வருகிறது. காரணம் நெஸ்லே இந்தியா இத்தயாரிப்புக்கு செய்த அதிகளவிலான விளம்பரம். இதனால் இந்நிறுவனத்தின் 75 சதவீத வர்த்தகம் மேகி நூடில்ஸ் விற்பனையைச் சார்ந்துள்ளது.

பாதிப்பு
இத்தகைய சூழ்நிலையில் தான் இந்திய மக்களின் உடல் நலத்தைப் பாதிக்கும் அளவிற்கு அதிகளவிலான நச்சுப்பொருட்கள் மேகி நூடுல்ஸில் கலந்து இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. அதிகளவிலான நச்சுப்பொருட்கள் கலந்திருப்பதைப் பல கட்ட சோதனைகள் மூலம் உறுதி செய்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர அமைப்பு (FSSAI) இதன் தயாரிப்பு மற்றும் விற்பனைக்குத் தடை விதித்தது. இதனால் நெஸ்லே நிறுவனத்தின் வர்த்தகம் இந்தியாவில் 80 சதவீதம் அளவில் பாதிக்கப்பட்டது.
இழந்தை இடத்தை பிடித்தது
தடைகள் நீக்கப்பட்டுச் சந்தை விற்பனைக்கு வந்த மேகி நூடுல்ஸ் வெறும் 9 மாத காலத்திற்குள் மொத்த இந்திய நூடுல்ஸ் விற்பனை சந்தையில் 57.1 சதவீத சந்தையைப் பிடித்துத் தான் இழந்த முதல் இடத்தை மீண்டும் ஜூலை மாதத்தில் பிடித்துள்ளது நெஸ்லே. நவம்பர் மாதத்தில் 10.9 சதவீதமாக இருந்த மேகி நூடுல்ஸ் மார்ச் 2016-ம் ஆண்டு 51 சதவீதமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தில் நெஸ்லே இந்தியா மேகி கப்பா நூடுல்ஸ், மேகி ஹாட்ஹெட்ஸ் மற்றும் ‘No Onion No Garlic' ஆகிய புதிய தயாரிப்புகளையும் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் மேகி தடை செய்யப்பட்ட காலத்தில் யெப்பி, டாப் ராமென், சிங் சீக்ரெட், க்னார் சூப்பி நூடுல்ஸ் போன்ற நிறுவனங்கள் வர்த்தகச் சந்தையைப் பிடிக்க முயற்சி செய்தாலும், மிகவும் கணிசமான அளவுகளிலேயே வர்த்தகத்தைப் பிடித்துள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் மேகி நூடில்ஸ் நிறுவனம் தடைக்கு முன் இழந்த மொத்த சந்தையும் பிடித்துள்ளது.

Leave a Reply