- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ.1032 கோடி ஒதுக்கீடு

சென்னை, பிப்.17-
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக அரசு உரிய காலத்தில் நிதியுதவி வழங்கி வருவதால், சென்னை மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.  இதுவரை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு மாநில அரசு ரூ.3,907.82 கோடியும், மத்திய அரசு ரூ.2,307.75 கோடியும் தங்களது பங்களிப்பாக வழங்கியுள்ளன.  இத்துடன், ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையும் ரூ.7,008.41 கோடி கடனுதவி அளித்துள்ளது.
ரெயில், பேருந்து, மெட்ரோ ரெயில் போன்ற பல்வேறு போக்குவரத்து வசதிகளும் ஒருங்கிணைக்கப்படும் பன்முகப் போக்குவரத்து முனையமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை உருவாக்க, ரூ.389.42 கோடி நிதியுதவியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.  மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,032.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply